பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 2)
தமிழ் வணக்கம்!!! பழந்தமிழர்கள் பயன்படுத்திய வேறு சில ஆயுதங்கள் பற்றி இன்று காண்போம். மட்டுவு - தமிழரின் போர்கருவிகளில் தலைசிறந்த ஆயுதம். இவ்வாயுதத்தின் இரு மான் கொம்புகள் கேடயத்தால் இணைக்கப்பட்டிருக்கும். இரு முனைகளும் கூர்மையாக சீவப்பட்டிருக்கும். மான் கொம்பை கேடயத்தில் இரண்டு பக்கமும் வைத்து சிலம்பாட்டத்தை போல் சுற்றும்பொழுது , எதிரிகள் தடுமாறுவர். அந்த சுற்றில் , எதிரிகள் சுழற்றும் போர்க்கருவிகளை தடுக்கும் வல்லமை பெற்ற கருவி , மட்டுவு. உருமி - உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த களரி எனும் கலைகளுள் , முக்கியமான போர்க்கலை தான் , இந்த உருமி. தொல்தமிழ் சொல்லான உருமி , சுட்டுவாள்(சுழலும் வாள்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் கண்ட போர்க்கருவிகள் கற்றுத்தேர ஓரிரு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால் , இக்கருவியை தேர்ந்து பயன்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். பல்முனை ஆட்களின் தாக்குதல்களை , சுழற்றுதலின் மூலம் எதிர்கொள்ளக்கூடியது. வலது கையில் உருமியும் , இடதுகையில் கேடயமும் கொண்டு போரிடும் வழக்கம் கொண்டதாக அறியமுடிகிறது. வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும் ; முனையில் கூரி...