குமரிக்கண்டம் (பகுதி 1)
தமிழ் வணக்கம்!
நம்ம வாழ்க்கைல
தினமும் எதாவது ஒரு விஷயத்தை யார்கிட்டயாவது இருந்தோ இல்ல எதையாவது பாத்தோ
தெரிஞ்சிக்கிறோம். அந்த மாதிரி, நாங்க சமூக வலைத்தளம் மூலியமா தெரிஞ்சிகிட்ட விஷயத்தை இன்னிக்கி
உங்ககிட்ட பகிரணும்னு விரும்புறோம். இந்த பதிவு உங்கள பல விஷயங்களை பத்தி ஆழமா
சிந்திக்க வைக்கும். தமிழ் மொழி சார்ந்தும் தமிழ் கண்டம் சார்ந்தும் பல கேள்விகள்
நமக்குள்ள எழும். அதுல சில கேள்விகளுக்கு பல வழிகள்ல இன்னிக்கு நம்ம விடை
தெரிஞ்சுக்கலாம்.
பண்டைய தமிழ்
நாகரிகத்தை பத்தி அறிஞர்கள் மத்தியில பரவலா பேசப்படுது. நமல்ல நெறைய பேர் லெமுரியா
கண்டம் பற்றி கேள்வி பற்றுப்போம். கன்னியாகுமரிக்கு அப்பால், மேற்கே
ஆப்பிரிக்கா வரைக்கும் கிழக்கே ஆஸ்திரேலியா வரைக்கும் நீண்ட ஒரு மிக பெரிய
நிலப்பரப்பு இருந்துச்சுன்னும் அது கடல் சீற்றத்தினால் அளிக்கப்பட்ருச்சு நும் பல ஆராய்ச்சிகள்லயும் தமிழ்
சங்க இலக்கியங்கள்லயும் தெரிவிக்கப்பற்றுக்கு. ஆனா சில வரலாற்று ஆசிரியர்கள், லெமுரியான்றது
கட்டுக்கதைன்னு சொல்லி மூன்று கருத்த முன் வைக்கிறாங்க. முதல் கருத்தா, சில அறிஞர்கள், அட்லாண்டிக்
பெருங்கடல்ல மூழ்குன ஒரு கண்டமும் லெமுரியா னு சொல்ராங்க. இது படி பாத்தா, ஒரே பெயர் வெச்ச
இரண்டு கண்டங்கள் நீர் ல மூழ்குனது எப்படி சாத்தியம்ன்ற கருத்த முன் வைக்கிறாங்க.
இந்த கருத்துக்கான சரியான விடையா தமிழ் சங்க இலக்கியங்கள் இருந்ததன. லெமூரியாவை
குமரிக் கண்டம் னு குறிப்பிட பற்றுந்துது.
அடுத்த கருத்தா
முன் வைக்கிறது, எப்படி இவ்ளோ பெரிய நிலப்பரப்பு ஒரு சுனாமி நால அழிக்கப்பற்றுக்கும்
ன்றது தான். இதற்கான ஆதாரமும் நம்ம தமிழ் சங்க இலக்கியங்கள்ல தான் இருக்கு. இறையனார்
அகப்பொருள்ன்ற இலக்கிய நூல்ல, குமரிக்கண்டம் அடுத்தடுத்து வந்த மூன்று சுனாமிகளால தான்
அழிக்கப்பட்டது னு குறிப்பிற்றுக்கு. அதுல, முதல் சுனாமி, பாண்டியர்களோட முதல் தலைநகரமான தென்மதுரையையும், இரண்டாவது
சுனாமி, பாண்டியர்களோட
இரண்டாவது தலைநகரமான கபாடபுரத்தையும், மூன்றவது சுனாமி மணலூரையும் மீதம் இருந்த பகுதிகளையும் அழிச்சுருச்சு
னு குறிப்பிடருக்கு.
மூணாவது கருத்தா, இவ்ளோ பெரிய
நிலப்பரப்பு நீர் ல மூழ்குச்சா ன்றதுதான். ஏன்னா, வரலாறு
எழுதப்பட்ட நாள் ல இருந்து, கண்டம்னு சொல்ற அளவுக்கு பெரிய நிலப்பரப்பு இல்லன்னும், ஒரு குறிப்பிட்ட
நிலப்பரப்பு தான் இருந்தது நும்,
அப்டி இருந்துருந்தாலும், மனிதர்கள்
வாழறதுக்கான இடமான்றது கேள்விக்குறியான விஷயம் தான் னு சொல்ராங்க. இதற்கான விடை ஒரு கட்டுரை
மூலியமா நமக்கு கெடச்சுருக்கு. அது படி, கடலின் அடிப்பரப்பு, சமமா இருக்காதுன்னும், மலை முகடுகள், எரிமலைகள், பள்ளத்தாக்குகளும்
இருக்குனும் குறிப்பிட பற்றுக்கு. அதே மாறி ஒரு நிலப்பரப்பு தான், கன்யாகுமரிக்கும்
அண்டர்டிக்காக்கும் நடுல இருக்கு னு
சொல்ராங்க. கடல் மட்டத்துக்கு 4000 metres கீழ எடுக்கப்பட்ட செயற்கைக்கோள்
படங்களை வெச்சு பாத்தா, குமரிக்கண்டத்தில் இருந்த மலைகள் வாழத் தகுந்ததா இல்லன்னு சொல்றாங்க.
ஆனா அந்த மலைகளுக்கும், கன்யாகுமரிக்கும் இடைல 20,000 சதுர அடில சமமான நிலப்பரப்பு இருக்கறதா
சொல்ராங்க. அந்த மலைகள் தொல்காப்பியத்துல குறிப்பிட்ட தெற்கு எல்லையான குமரி
மலைகள் தான். வடக்கு எல்லை வேங்கட மலைகள் நும், மேற்கு மற்றும் கிழக்கு கடல் எல்லைகளா இருந்தது
நும் குறிப்பிற்றுக்கு. அந்த பரந்த நிலப்பரப்பு சங்க இலக்கியங்கள்ல குறிப்பிட்ட
மாறி, குமரிக்கண்டமா
தான் இருந்துருக்கணும். அடுத்தடுத்து வந்த சுனாமி நால பாண்டியர்களோட தலைநகரங்களான
தென்மதுரையும் கபாடபுரமும்
அளிக்கப்பட்ருக்கனும்.
கெடச்ச
ஆதாரங்களையெல்லாம் வெச்சு பாத்தா,
தென்மதுரை சுமார் 5000 வருடத்துக்கு முன்னாடி
கடல்ல மூழ்கிருக்கணும். அது கடல்ல மூழ்குணப்போவே ஒரு பெரிய வணிக தலை நகரம். அப்போ
அது இவ்ளோ பெரிய நகரமா உருவாகரதுக்கு குறைந்தது 500 வருடங்களாவது ஆகிருக்கணும்.
அதனால, தமிழ்
நாகரிகம்,
ஆரம்பம் ஆனது 5500 வருடத்துக்கு முன்னாடின்னு கணிக்க
முடியுது. 2500 வருடங்களுக்கு முன்னாடி அஜீவிக்கான்ர ஒரு புதிய மதம் உருவாக
ஆரம்பிச்சது. அதுதான், தமிழ் நாகரீகத்தோட முடிவா கருதப்படுது. தமிழ் நாகரிகம் தழைத்தோங்கிய
காலம் 3500 கி.மு. ல இருந்து 500 கி.மு. வரை.
இதோட
தொடர்ச்சியா அடுத்த பதிவுல, தமிழ் நாகரீகத்துல வாழ்ந்த மக்களோட பண்புகள், ஆட்சி முறை, வணிகம், கல்வி, அதோட அகழாய்வுகள
பத்தி பாக்கலாம்.
தமிழ் சார்ந்த தேடல்!
தமிழுக்கான
தேடல்!
- சங்கேத் & கிஷோர்



கருத்துகள்
கருத்துரையிடுக