தஞ்சை பெருவுடையார் கோவில்

   

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! 

வணக்கம் வாசகர்களே ! 

    இந்த காலத்தில் கட்டப்படும் கட்டுமானங்கள் பல வருடங்கள் நிலைப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் கட்டப்பட்ட பல கட்டுமானங்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

    அப்படிப்பட்ட கட்டுமானங்களில் ஒன்று தஞ்சை பெருவுடையார் கோவில்இக்கோவில் ப்ரஹதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ப்ரஹதீஸ்வரர் என்பது தமிழ் பெயர் அல்லஅது சம்ஸ்கிருத பெயர். அதன் பொருள் மிகப்பெரிய சிவன் என்பதாகும்.

    இக்கோவில் இரு தளங்கள் கொண்டு அமைக்கப்பட்டது. ஒரு தளம் கருவறை வரையும் மற்றொரு தளம் விமானம் வரை நீளம் கொண்டது. இந்த கோயில் பூமியின் ஈர்ப்பு விசை சமநிலையுடன் கட்டப்பட்டது. 

    ராஜராஜ சோழன் காலத்திற்குப் பிறகு இப்பெயர் (தஞ்சை பிருஹதீஸ்வரர் கோவில்)  மராத்திய மன்னர்களால் சூட்டப்பட்டதுஇக்கோவிலின் முன் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகிறது. இரண்டாவது கோபுரம் ராஜராஜன் திருவாயில் என அழைக்கப்பட்டது

கேரளாந்தகன் திருவாயில்         ராஜராஜன் திருவாயில்

    இக்கோவில் முழுவதும் க்ரானைட் கற்களால் வலுவாகப் பின்னிப் பின்னைத்து கட்டப்பட்டதுஇக்கோவிலை சுற்றி அறுபது கிலோமீட்டர் பரப்பளவிற்கு க்ரானைட் கற்கள் இன்றளவும் கண்டறியப்படவில்லை. 

    இக்கோவில் 5000 யானைகள் கொண்டு கட்டப்பட்டது. இக்கோவிலின் விமானம் உச்சத்தை அடைய சுமார் 5 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.  இக்கோவிலின் உயரம் 216 அடி என்று அறியப்படுகிறது. 


    அளவுகோல் இல்லாத காலத்தில் நெற்கதிர்களைக் கொண்டு சோழர்கள் அளந்தனர்எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அதன் நீளத்தை ஒரு விரல் என்று அழைத்தனர்இருப்பத்தி நான்கு விரல் என்பது ஒரு தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டதுஇவ்வாறு நெல் கதிர்களை வைத்தே ஒரு கோவில் கட்டப்பட்டது தமிழரின் கட்டிடக்கலை நுட்பத்திற்கு சான்றாக இது பார்க்கப்படுகிறது.

    இக்கோவிலின் கருவறை முதல் விமானம் வரை உள்ள உட்கட்டமைப்பு வெற்றிடமாக இருப்பது மேலும் வியப்பூட்டுகிறது.

    கோவிலைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வெளிநாட்டு வணிகர்களின் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளதுஇதன் மூலம் சோழர்கள் உலகின் பல பகுதிகளில் வணிகம் செய்ததற்கு இது சான்றாக பார்க்கப்படுகிறது. 

    பெரும்பாலான கோவில்களில் கருவறை கட்டப்பட்ட பின்னரே மூலவர் நிறுவப்படுவது இயல்புஆனால் பெருவுடையார் கோவிலில் ஈசன் நிறுவப்பட்ட பின்னரே கருவறை எழுப்பப்பட்டது.

    இக்கோவிலில் உள்ள அனைத்தும் இந்திய ஓவியக் கலை வரலாற்றில் சிறப்பிடம் மிக்கவை. இங்குள்ள ஆடல் மகளிரின் ஓவியங்கள் இன்றைய உலகப் புகழ்பெற்ற பிற்கால “மோனாலிசா” ஓவியத்தை விட மிகச் சிறப்பானவை. இக்கோவிலின் கருவறையின் மேல் உள்ள முதல் தளத்தில் ஆடல் கலைக்கு சிறப்பிடம் அளிக்கும் வகையில் பரத நாட்டியத்தின் 108 ஆடல் வகைகளில் 81 ஆடல் மகளிரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு 1987 -ல் அறிவித்ததுதாஜ் மஹால், கடந்த 2007 -ம் ஆண்டு உலக அதிசயங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கலை நுணுக்கம் மிகுந்த பெருவுடையார் கோவில் உலக அதிசய பட்டியலில் கூட இடம் பெறாதது ஏனோ தெரியவில்லை. 

    பிரான்ஸ் நாட்டில் உள்ள பைசா கோபுரம் கட்டமைப்பு பிழையால் சாய்ந்து காணப்பட்டது. அதனால் இது உலக அதிசயங்களுள் ஒன்றானது. 

    ஆனால் 1020 வருடங்களுக்கு முன்னாள் பிழையின்றி நுட்பமாக கட்டப்பட்ட கோவில் உலக அதிசய பட்டியலில் கூட இடம் பெறாதது ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

    நம் வாழ்வில் ஒரு முறையாவது ராஜராஜன் வலம் வந்த தமிழர் அதிசயத்தை காண வேண்டும்.

தமிழால் இணைவோம் !

- சங்கேத் & கிஷோர் 

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 1)