கல்லணை
இந்த காலத்தில் பல தொழில்நுட்பங்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டுமானங்கள் பல
நீடித்து நிற்பதில்லை. ஆனால் ஆயிரம் ஆயிரம் வருடங்குளுக்கு முன் தொழில்நுட்பங்கள்
வளராத காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் கம்பீரமாக இன்றும் பயன்பாட்டில்
இருக்கின்றன.
அத்தகு சிறப்புடைய கட்டுமானங்களுள் ஒன்றை பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம்.
கல்லணை - உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல். திருச்சிக்கு மிக அருகில்
உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர்
வட்டத்தில் உள்ள தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அணை கரிகால்
சோழனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இவ்வணை 1080 அடி நீளமும் 66 அகலமும் 18 அடி உயரமும்
கொண்டது.
தான் செல்லுமிடமெல்லாம் பூங்காக்களை விரித்துச் செல்லும் காவிரி, சோழர் காலத்தில் நீர் ஆதாரமாக திகழ்ந்தது.
பொன்னி என்று அழைக்கப்பட்ட காவிரி பாயும் இடமெல்லாம் உழவு பசுஞ்சோலையாய்
காணப்பட்டது.
உறையூரை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த கரிகால சோழன், எந்த ஒரு பயனும் இன்றி தலைகாவிரியில் இருந்து வங்காள விரிகுடா வரை பெரும்
இயற்கை செழுமையோடு பாய்ந்து கொண்டிருந்த காவிரியைக் கண்டார். அந்த ஆறு விவசாயத்திற்கு பயன்படாமல் செல்வதைக்
கண்டு வருந்தினார். அவரை அது ஆராய்ச்சிற்கு தூண்டியது. அவரது முன்னோர்களான
பாண்டியர்கள், குமரிக்கண்டத்தில் இருந்த நதி பஹ்ருலியாரு
நீர்ப்பாசன விநியோக அமைப்பு பற்றி பெரிதும் ஆராய்ந்து அதனால் ஈர்க்கப்பட்டார்.
அதன் விளைவாகவே கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்தது.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம் கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள் பழந்தமிழர்கள்.
இவ்வணை முழுவதும் கற்களைக் கொண்டு கைதிகளாலும் சிறை பிடிக்கப்பட்ட வீரர்களாளும் கட்டப்பட்டது. இக்கற்களின் விவரம் கண்டறியப்படவில்லை. ஆனால் இது திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது. இது மாடுகளின் உதவியோடு கொண்டு வரப்பட்டதால் இதன் உயரம் 1.5 அடி மீளாமலும் 2 டண் மிகாமலும் இருந்தது. கொண்டு வரப்பட்ட கற்கள் கடப்பாறைகளால் துளை இடப்பட்டு, மர ஆப்புகள் உல் நுழைக்கப்பட்டு, தண்ணீர் வேகமாக பீச்சி அடிக்கப்பட்டு உடைக்கப்பட்டது. அந்த கற்கள் ஆற்றுப்படுகையின் குறுக்கே போடப்பட்டது. இக்கற்கள் மண்ணில் புதைந்து ஆற்று படுக்கையின் மேல் தெரியும் வரை போடப்பட்டது.
இரு கற்களுக்கும் உள்ள இடைவெளி வழுவழுப்பான சுண்ணாம்புக்கலவை கொண்டு மூடப்பட்டது. பொதுவாக சுண்ணாம்புக்கலவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் கலவை நிலைத்து நிற்கிறது. இவ்வாறு கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட அணை பல பேரிடர்களை சந்தித்தும் நிலைத்து நிற்பது வியப்பூட்டுகிறது.
தலைகாவிரியில்
இருந்து கரைபுரண்டோடும் காவிரி ஆறு ஸ்ரீரங்கத்திற்கு முன்னால் காவிரியாகவும் கொள்ளிடமாகவும்
பிரிகிறது. காவிரி பாயும் வழியில் தான் கல்லணை அமைக்கப்பட்டுள்ளது. கல்லணைக்குப்
பிறகு தான் காவிரி நான்கு ஆறுகளாக பிரிகிறது. காவிரியின் ஒரு பகுதி
கொள்ளிடத்திற்கும் மற்றவை காவிரியாகவும், வெண்ணாராகவும், புது ஆராகவும் பிரிந்து பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவுடன்
சேர்கிறது. இதனால் பேரிடர் காலத்தில் வெள்ள நீர் வரும் போது, அதிகபட்ச நீர் கொள்ளிடம் வழியாகவும் மீதமுள்ள
நீர் மற்ற ஆறுகளுக்கும் பிரிந்து சென்று
விடும். இதனால் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆற்றங்கரையில் உள்ள
ஊர்கள் பாதிக்கப்படாது.
இது கட்டப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்தது. அதன் பிறகு 1804-ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேப்டன் கால்டுவெல் என்ற ராணுவ பொறியாளர், காவிரி ஆற்றை ஆராய்வதற்கும், பாசன பகுதியை பெருக்குவதற்காகவும் நியமிக்கப்பட்டார். நீர்ப்பாசன நோக்கங்களுக்காக ஒரு சிறிய அளவிலான நீரை மட்டும் விட்டு ஒரு பெருமளவு நீர் கொள்ளிடம் வழியாக செல்வதை அவர் கண்டறிந்தார். இதனால் கல்லணையின் உயரத்தை மேலும் 69 cm க்கு உயர்த்தினார்.
இது ஆங்கிலேயர்களால் நவீனப்படுத்தப்பட்டாலும் பெருமை பண்டைய தமிழரையே சாரும். பிரபல நீர்ப்பாசன நிபுணரான சர் ஆர்தர் காட்டன் இவ்வணையின் தொழில்நுட்பத்தால் வியந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு THE GRAND ANAICUT என்ற பெயரை சூட்டினார்.
தனது அணை வடிவமைப்புகளை இதைக்கொண்டே
வடிவமைத்தார். அதன் பிறகு பல
ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டது. ஆனால், அனைத்தும் வியூகங்கள்
ஆகவே அமைந்தது. தற்போது வரை அதன் உண்மையான தொழில்நுட்பம் கண்டறியப்படவில்லை.
உலகிலேயே நான்காவது பழமையான அணையாகவும் இந்தியாவின் மிக பழமையான அணையாகவும்
திகழும் கல்லணை பற்றி தமிழ் சங்க இலக்கியங்கள் பல இடங்களில் குறிப்பிடுகிறது. வருவிசை
புனலைக் கற்சிறை போல என்று தொல்காப்பியமும், காடு கொன்று
நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியோன் என்று பட்டினப்பாலையும் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் வேறு சில சுவாரஸ்யமான இடங்களையும் நீங்கள் காணலாம். ஆனால் இந்த அணை
நிச்சயமாக உங்களை இடைநிறுத்தி ஆரம்பகால தமிழ் மக்களின் தனித்துவமான சாதனைகளைப்
பற்றி சிந்திக்க வைக்கும். இன்றளவும் இந்திய
வரலாற்றின் பக்கங்களில் ஒரு புதிராகவும் சோழர்களின் கட்டிட புகழை தன் மீது தாங்கியும்
வான்கண்டு நிற்கிறது கல்லணை.
தமிழ் சார்ந்த தேடல், தமிழுக்கான தேடல்
!













கருத்துகள்
கருத்துரையிடுக