இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 2)

படம்
  தமிழ் வணக்கம்!!! பழந்தமிழர்கள் பயன்படுத்திய வேறு சில ஆயுதங்கள் பற்றி இன்று காண்போம். மட்டுவு - தமிழரின் போர்கருவிகளில் தலைசிறந்த ஆயுதம். இவ்வாயுதத்தின் இரு மான் கொம்புகள் கேடயத்தால் இணைக்கப்பட்டிருக்கும். இரு முனைகளும் கூர்மையாக சீவப்பட்டிருக்கும். மான் கொம்பை கேடயத்தில் இரண்டு பக்கமும் வைத்து சிலம்பாட்டத்தை போல் சுற்றும்பொழுது , எதிரிகள் தடுமாறுவர். அந்த சுற்றில் , எதிரிகள் சுழற்றும் போர்க்கருவிகளை தடுக்கும் வல்லமை பெற்ற கருவி , மட்டுவு. உருமி - உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த களரி எனும் கலைகளுள் , முக்கியமான போர்க்கலை தான் , இந்த உருமி. தொல்தமிழ் சொல்லான உருமி , சுட்டுவாள்(சுழலும் வாள்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் கண்ட போர்க்கருவிகள் கற்றுத்தேர ஓரிரு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால் , இக்கருவியை தேர்ந்து பயன்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். பல்முனை ஆட்களின் தாக்குதல்களை , சுழற்றுதலின் மூலம் எதிர்கொள்ளக்கூடியது. வலது கையில் உருமியும் , இடதுகையில் கேடயமும் கொண்டு போரிடும் வழக்கம் கொண்டதாக அறியமுடிகிறது. வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும் ; முனையில் கூரி...

தமிழர் விஞ்ஞானம் (பகுதி 1)

படம்
  தமிழ் வணக்கம் !!! இன்று நாம் படித்து வியந்த பல அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் பல நூறு வருடங்களுக்கு முன்னரே , பழந்தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது வருங்கால சந்ததியினர் பயன்பெறுவதற்காக , இலக்கியங்களிலும் , இலக்கணங்களிலும் , தமிழ் செய்யுள்களிலும் புகுத்தி பாதுகாத்துள்ளனர். எத்தனை எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே , தமிழர்கள் உலகத்துக்கு அளித்துள்ளனர் என்பதை நாம் மறந்தோம். அவற்றுள் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்வோம். தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்: பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம் வரை அறிவியல் பரவிக்கிடக்கிறது. இலக்கியம் என்பது வெறும் ரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளது. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இதனை பல தமிழ் சங்க இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. அவ்வை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது , அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியல...

பழம்பெரும் பொருட்கள் (பகுதி 1)

படம்
தமிழ் வணக்கம்!!! இன்று நாம் செய்யும் அன்றாட வேலைகளுக்கு பல தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் , பல நூறு வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் , சிறு வேலைகள் செய்வதற்கு கூட , நுண்ணறிவோடு தீர்வு கண்டார்கள் பழந்தமிழர்கள். அவற்றுள் சிலவற்றை இன்று நாம் காணவிருக்கிறோம். பறி - இது வயலில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு கருவி. இது இரண்டு வகைப்படும் - இரும்பு பறி , தோலினால் ஆன பறி. தண்ணீர் இறைக்க கமலை பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் ஒரு கிணற்றுக்கு ஒரு கமலை தன இருக்கும். பெரும் கிணறாக இருந்தால் நான்கு கமலைகள் வரை பயன்படுத்தலாம். ஒரு கமலைக்கு , இரண்டு எருதுகள் , ஒரு ஆள் தேவைப்படும். இந்த நுட்பம் , வடக்கயிறு மற்றும் வார்க்கயிறுகள் மூலியமாக அடைய முடியும். கமலையில் இருக்கும் பறி உருளை கொண்டு வடக்கயிறு மூலியமாக எருதுகளோடு இணைக்கப்பட்டிருக்கும். பறியின் அடிபக்கத்தில் , வால் எனும் பை போன்ற அமைப்பு இருக்கும். அது வால்கயிறு மூலியமாக எருதுகளோடு இணைக்கப்பட்டிருக்கும். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் , அந்த வால் வழியாக , நீர் வாய்க்காலில் விழுவதற்கு தோதாக வால் கயிற்ற...