பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 1)
தமிழ் வணக்கம்!!! பண்டைய தமிழர்கள் , அறிவில் சிறந்தவர்கள் - வீரத்தில் திளைத்தவர்கள். இன்று நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்கள் , அன்றே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் , சில நாடுகளுடன் போரிட பல ஆயுதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் , அக்காலகட்டத்தில் , பல நாடுகளைக் கைப்பற்ற சில ஆயுதங்கள் மட்டுமே தேவைப்பட்டன. அவ்வாயுதங்கள் , நுண்ணறிவோடும் , சரியான கணக்கீடோடும் , வடிவத்தோடும் செய்யப்பட்டன. அவை குறி தவறாமல் இலக்கை அடைந்தன. அவற்றுள் நாம் அறியாத சில ஆயுதங்கள் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம். வளரி ஒரு வீசு வகை ஆயுதம். இது போர்காலங்களிலும் , கால்நடைகளை வேட்டையாளர்களிடமிருந்து காப்பாற்றவும் பயன்படுத்தப்பட்டன. இவை புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. வளரியின் ஒரு முனை உருண்டையாகவும் , மற்றொரு முனை தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் இரும்பினால் செய்யப்படுகிறது. இது பொதுவாக வீசும் போது சுழலும். ஆனாலும் , வீசுபவர் இவ்வாயுதத்தின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவை செங்குத்தாகவும் , கிடைமட்டமாகவும் சுழலக்கூடியது. இவ்வாயுதம் கொண்டு ஒருவரைக் கொல்ல ...