கல்லணை
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! வணக்கம் வாசகர்களே ! இந்த காலத்தில் பல தொழில்நுட்பங்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டுமானங்கள் பல நீடித்து நிற்பதில்லை. ஆனால் ஆயிரம் ஆயிரம் வருடங்குளுக்கு முன் தொழில்நுட்பங்கள் வளராத காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் கம்பீரமாக இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகு சிறப்புடைய கட்டுமானங்களுள் ஒன்றை பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம். கல்லணை - உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல். திருச்சிக்கு மிக அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் , பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அணை கரிகால் சோழனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இவ்வணை 1080 அடி நீளமும் 66 அகலமும் 18 அடி உயரமும் கொண்டது. தான் செல்லுமிடமெல்லாம் பூங்காக்களை விரித்துச் செல்லும் காவிரி , சோழர் காலத்தில் நீர் ஆதாரமாக திகழ்ந்தது. பொன்னி என்று அழைக்கப்பட்ட காவிரி பாயும் இடமெல்லாம் உழவு பசுஞ்சோலையாய் காணப்பட்டது. உறையூரை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த கரிகால சோழன் , எந்த ஒரு பயனும் இன்றி தலைகாவிரியில் இருந்து வங்காள விரிகுடா வரை பெரும் இயற்கை செழுமையோடு பா...