இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

படம்
  தமிழ் வணக்கம்!!! திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அது இரு மனங்களுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் தருணம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. பரிமாறப்பட்ட அன்பு தனது வாழ்க்கையின் புதிய பயணத்தை துவக்குகிறது. அவ்விரு மனங்களின் வாழ்க்கை பயணம் பல இடர்களை சந்தித்தும் இணைபிரியா அன்போடும் ஆனந்தத்தோடும் ஓரிடத்தில் நிற்கிறது. தனது திருமண வாழ்க்கையை திரையிட்டு காட்டும் ஒரு தன்னிகரில்லா தருணம் - அறுபது , எழுபது , எண்பதுகளில் நிகழும் மணவினை. அம்மணவினை யாகங்கள் கொண்டு பல கோவில்களில் நடத்தப்படுகிறது. அக்கோவில்களில் ஒன்று மிகச்சிறப்புடையது. இங்கு திருமண யாகம் நடத்தப்பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை. அது நாகப்பட்டினம் மாவட்டத்தில் , திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலைப் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம். இக்கோவில் எட்டு வீரட்டங்களுள் ஒன்றாகும். வீரட்டம் என்பது வதம் செய்வதை குறிக்கும் சொல். தேவாரப் பதிகம் பெற்ற காவிரி தென்கரைக் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் சோழ மன்னனால் 9 ஆம் நூற்றாண்டில் திராவ...